தெரியுமா?: கேரளத்தில் வெள்ள நிவாரணத்துக்கு உதவ
அண்மையில் கேரள மாநிலத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் 300,000 பேருக்கும் மேற்பட்டோர் தற்காலிகத் தங்குமிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். நூறு ஆண்டுகளாகக் கண்டிராத மழை வெள்ளத்தால் 2.5 மில்லியன் ஏக்கர் விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. மொத்த பாதிப்பு மூன்று பில்லியன் டாலருக்கும் அதிகமாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் நாட்டில் 2016ம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது 1 மில்லியன் டாலர் நிவாரண நிதி திரட்டி, பல திட்டங்களைத் திறம்படச் செயல்படுத்திய தமிழ் நாடு அறக்கட்டளை இப்போதும் களத்தில் இறங்கியுள்ளது. நீங்கள் அதன் மூலம் நிதி வழங்கி, பேரிடரில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு உதவுவதுடன், அமெரிக்க வருமான வரி விலக்கும் பெறலாம்.

நிதி வழங்க: www.TNFUSA.org/donate

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com