கணிதப் புதிர்கள்
1. 1070 = 1110. எப்படி?

2. ராமுவின் தாத்தா ஊரிலிருந்து வந்திருந்தார். அவர் கையோடு 16 பேனாக்களையும் கொஞ்சம் டாலர்களையும் கொண்டு வந்திருந்தார். முதல் பேனாவின் விலை ஒரு டாலர். இரண்டாவது பேனாவின் விலை இரண்டு டாலர். மூன்றாவது பேனாவின் விலை மூன்று டாலர். இவ்வாறாக 16வது பேனாவின் விலை 16 டாலர். தாத்தா, பேனாக்களின் எண்ணிக்கையும் தான் கொண்டு வந்திருந்த டாலர்களின் எண்ணிக்கையும் சமமாக இருக்கும்படி தனது நான்கு பேரன்களுக்கும் பகிர்ந்தளித்தார். அவர் எப்படிப் பகிர்ந்தளித்திருப்பார் என்று உங்களால் ஊகிக்க முடிகிறதா?

3. 1 = 5
2 = 25
3 = 325
4 = 4325
5 = ?

4. நான்கு 9களைப் பயன்படுத்தி, கூட்டியோ, கழித்தோ, வகுத்தோ, பெருக்கியோ விடை 100 வரவேண்டும். இயலுமா?

5. தாத்தா ஒரு ரேடியோ வாங்கி வந்தார். அவருக்கு நான்கு பேரன்கள். அவர்களிடம், "இதன் விலையை யார் சரியாகச் சொல்கிறீர்களோ அவர்களுக்கு இதனைப் பரிசாகத் தருவேன்" என்றார். முதல் பேரன், "என்னிடம் இருக்கும் சேமிப்பின் இரட்டிப்புத் தொகையும் மற்ற மூன்று பேர்களின் சேமிப்பும் சேர்த்தால் எவ்வளவு வருமோ அதுவே இதன் விலை" என்றான். இரண்டாமவன், "எனது சேமிப்பின் மூன்று மடங்குத் தொகையும் மற்ற மூன்று பேர்களின் சேமிப்பும் சேர்த்தால் எவ்வளவு வருமோ அதுவே இதன் விலை" என்றான். மூன்றாமவன், "எனது சேமிப்பைப் போல நான்கு மடங்குத் தொகையும் மற்ற மூன்று பேர்களின் சேமிப்பும் சேர்த்தால் எவ்வளவு வருமோ அதுவே இதன் விலை" என்றான். நான்காமவன், "எனது சேமிப்பைப் போல ஐந்து மடங்குத் தொகையும் மற்ற மூன்று பேர்களின் சேமிப்பும் சேர்த்தால் எவ்வளவு வருமோ அதுவே இதன் விலை" என்றான். கடைசியில் நால்வர் சொன்ன தொகையும் ஒன்றாக இருந்ததால் தாத்தா ஆளுக்கு ஒரு ரேடியோ வாங்கிக் கொடுத்தார் என்றால், பேரன்கள் சொன்ன தொகை என்ன, ரேடியோவின் விலை என்ன?

அரவிந்த்

விடைகள்

© TamilOnline.com