திரைக்கு வரக் காத்திருக்கிறார் 'தாஸ்'
ஜெயம் ரவி - ரேணுகா மேனன் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் 'தாஸ்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து படம் திரைக்கு வரக் காத்திருக்கிறது. படத்தில் விசேஷமான அம்சமாக வருவது தேர். தேர்த்திருவிழாவைப் பல படங்களில் பார்த்திருந்தாலும் இப்படத்தில் தேர் நகர ஆரம்பித்து முடிகிற வரை வருகிற நிகழ்வுகளை அழகாகப் பதிவு செய்திருக்கிறார்கள். தேர்த் திருவிழாவுடன் தொடங்கிறது படம்.

படத்தின் கிளைமாக்ஸ் பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்கு கொண்டு செல்லும் விதமாக இருக்கும் என்று கூறுகின்றனர் 'தாஸ்' பட குழுவினர்.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com