கீன்வா (Quinoa) அடை
தேவையான பொருட்கள்
கீன்வா - 1 கிண்ணம்
ஓட்ஸ் - 1/2 கிண்ணம்
கடலைப்பருப்பு - 1/2 கிண்ணம்
உளுத்தம்பருப்பு - 1/2 கிண்ணம்
துவரம்பருப்பு - 1/2 கிண்ணம்
பாசிப்பருப்பு - 1/2 கிண்ணம்
மிளகாய் வற்றல் - 8
பெருங்காயம் - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்துமல்லி - சிறிதளவு
தேங்காய்த் துருவல் - சிறிதளவு
வெங்காயம் - சிறிதளவு
எண்ணெய் - அடை வார்க்க

செய்முறை
கீன்வாவுடன் மற்ற எல்லாவற்றையும் சேர்த்து மூன்று மணி நேரமாவது ஊற வைக்கவும். பின்னர் உப்பு, வெங்காயம், மிளகாய் வற்றல் சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். அதில் கொத்துமல்லி, கறிவேப்பிலை நறுக்கிப் போட்டு அடை செய்யலாம். பொன்னிறமாக எடுக்கவும். விருப்பத்துக்கேற்பத் தேங்காய்த் துருவல் அல்லது வெங்காயம் சேர்த்துக் கொள்ளலாம். தக்காளி, புதினா சட்னியுடன் சாப்பிடச் சுவையோ சுவை!

தங்கம் ராமசாமி,
பிரிட்ஜ் வாட்டர், நியூ ஜெர்சி

© TamilOnline.com