தேவையான பொருட்கள் கடலைப்பருப்பு - 1 கிண்ணம் உளுத்தம்பருப்பு - 1 கிண்ணம் மசூர் பருப்பு - 1 கிண்ணம் கறிவேப்பில்லை - சிறிதளவு கொத்துமல்லி - சிறிதளவு உப்பு - தேவைக்கேற்ப எண்ணெய் - தோசை வார்க்க பெருங்காயம் - சிறிதளவு
செய்முறை மூன்று பருப்புகளையும் மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு அதைக் களைந்து உப்பு, வெங்காயம் சேர்த்து நைசாக அரைக்கவும். மாவில் கறிவேப்பிலை, கொத்துமல்லி நறுக்கிப் போட்டு அடையாக வார்க்கவும். இது டயாபெடிஸ்காரர்களுக்கு நல்லது, ஆனால் எல்லோருக்குமே பிடிக்கும்.
தங்கம் ராமசாமி, பிரிட்ஜ் வாட்டர், நியூ ஜெர்சி |