ஹவுஸ் ஓனர்


தமிழ்த் திரையுலகின் குறிப்பிடத்தகுந்த பெண் இயக்குனரான லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கும் படம் 'ஹவுஸ் ஓனர்'. நாயகனாக ஆடுகளம் புகழ் கிஷோர் குமார் நடிக்கிறார். நாயகியாக ஸ்ரீரஞ்சனி நடிக்கிறார். உடன் 'பசங்க' புகழ் கிஷோர், லட்சுமி ராமகிருஷ்ணன், சுபலக்ஷ்மி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். லவ்லின் சந்திரசேகர் அறிமுகமாகிறார். புதிய வீடு வாங்க நினைக்கும் அழகான இளம் தம்பதியர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தான் படத்தின் கதை என்கிறார் கோலிவுட் கோவிந்து.

அரவிந்த்

© TamilOnline.com