பார்த்திபன் காதல்


புதுமுகங்கள் யோகி, வர்ஷிதா நாயக, நாயகியாக அறிமுகமாகும் படம் பார்த்திபன் காதல். குமரேசன் - ஜோ ஜார்ஜ் திரைக்கதை, வசனத்தை எழுத, வள்ளிமுத்து இயக்குகிறார். "கோவில்பட்டியில் நடந்த உண்மைச் சம்பவத்தை வைத்து, இளமை கொஞ்சும் காதல் கதையாகப் படம் உருவாகி வருகிறது. நாயகன் ஓவியக் கல்லூரி மாணவன். இளம் கதாநாயகி வர்ஷிதா கிராமத்துக் கல்லூரி மாணவி. காமெடிப் பேய் படங்களும், ஆக்‌ஷன் படங்களும் அதிகரித்த சூழலில், 'பார்த்திபன் காதல்' சுகமான காதல் கதையாக உருவாகி வருகிறது" என்கிறார் இயக்குனர். இசை: பில்லா.

அரவிந்த்

© TamilOnline.com