தாயன்பை வெளிப்படுத்தும் தந்தையின் கதை இது. நெதர்லாந்து, பெர்லின், வெனிஸ், ஷாங்காய் எனப் பல நாடுகளிலும் சர்வதேசத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றுள்ள இப்படத்தை, எழுத்தாளர்கள், நடிகர்கள், இயக்குநர்கள், சமூகச் செயல்பாட்டாளர்கள் எனப் பலரும் பாராட்டியுள்ளனர். மம்முட்டி, அஞ்சலி, சமுத்திரக்கனி, வடிவுக்கரசி, சாதனா, அஞ்சலி, அமீர், லிவிங்ஸ்டன், அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன்ஷங்கர்ராஜா இசையமைத்துள்ளார். இயக்கம்: ராம். தமிழ் மற்றும் மலையாளத்தில் விரைவில் வெளியாக இருக்கிறது இப்படம். "என் திரையுலக வாழ்வில் மறக்கமுடியாத படம் இது" என்று கண்ணீர் விடுகிறார் கோலிவுட் கோவிந்து.
அரவிந்த் |