தேவையான பொருட்கள் பாகற்காய் (சிறு துண்டுகள்) 2 கிண்ணம் இஞ்சி (பொடியாக நறுக்கியது - 1/2 கிண்ணம் எலுமிச்சைச் சாறு - 1/2 கிண்ணம் உப்பு - 1 1/2 தேக்கரண்டி மிளகாய்த்தூள் - 1 1/2 மேசைக்கரண்டி மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி சர்க்கரை - 1/2 தேக்கரண்டி பெருங்காயப்பொடி - 1/2 தேக்கரண்டி காடி (வினிகர்) - 2 மேசைக்கரண்டி செய்முறை பாகற்காயை நன்கு கழுவி, ஈரமில்லாமல் துடைத்து, (இளசாக இருந்தால், கொட்டையுடன்) மெல்லியதாக சிறு சிறு ,துண்டுகளாக்கவும். (தண்ணீரில் ஊறப்போட்டுப் பிழிந்தெடுத்தால் சத்துக்கள் போய்விடும்). பிறகு ஒரு பாத்திரத்தில் மற்றெல்லாப் பொருட்களையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இரண்டு மணிநேரம் ஊறியபிறகு, ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்து உபயோகிக்கவும். ஒரு மாதம்வரை துண்டுகள் நறுக்கென்று நன்றாக இருக்கும். எண்ணெய், உப்பு, காரம் அதிகம் இல்லாததனால் பெரியவர்களும் குழந்தைகளும் விரும்பிச் சாப்பிடுவார்கள். ஊறினால் கசப்பு இருக்காது.
வசுமதி கிருஷ்ணசாமி, டெட்ராயிட், மிச்சிகன் |