ஏப்ரிகாட் ஊறுகாய்
தேவையான பொருட்கள்
ஏப்ரிகாட் காய்கள் - 10
(குறைவாகப் பழுத்த பழங்களும் சேர்க்கலாம்)
நல்லெண்ணை - 3 மேசைக்கரண்டி
மிளகாய்ப் பொடி - 1 1/2 மேசைக்கரண்டி
மஞ்சள்தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
பெருங்காயம் - சிறிதளவு

செய்முறை
வாதுமைக் காய்கள் மற்றும் அரைப் பழங்களை எடுத்து அவை முழுகும் அளவு தண்ணீர் ஊற்றி, 10 நிமிடம் கொதிக்கவிடவும். இறக்கி வைத்து, நன்கு ஆறியபின் கொட்டை நீக்கி வைத்துக்கொள்ளவும். காய்களின் அளவுக்குத் தக்கபடி நல்லெண்ணெய் காயவைத்து, கடுகு தாளித்து, அதனுடன் மிளகாய்ப்பொடி, மஞ்சள்பொடி, பெருங்காயப்பொடி, தேவையான அளவு சேர்த்துக்கொள்ளவும்.

வேகவைத்துக் கொட்டை நீக்கிய ஏப்ரிகாட் காய்களை லேசாக மசித்து அந்த எண்ணையில் போட்டு, உப்புச் சேர்த்துக் கிளறவும். பத்து நிமிடம் மிதமான சூட்டில் வைத்து நன்றாக கிளறவும். அடுப்பை அணைத்து விடவும். நன்கு ஆறியபின் உலர்ந்த பாத்திரம் அல்லது பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ளவும்.

இந்த ஊறுகாய் தயிர் சாதம், சப்பாத்தி மற்றும் தோசையுடன் தொட்டுச் சாப்பிடச் சுவையாக இருக்கும். நீண்டநாள் வைக்கவேண்டும் என்றால் பிரிசர்வேடிவ் உபயோகிக்கவேண்டும்.

கனகா,
சான் ஹோசே, கலிஃபோர்னியா

© TamilOnline.com