TNF ஹூஸ்டன்: தந்தையர் தினவிழா
ஜூன் 17, 2018 அன்று தமிழ்நாடு அறக்கட்டளை ஹூஸ்டன் கிளை தந்தையர் தினத்தைச் சிறப்பாகக் கொண்டாடியது. அன்னையர் தயாரித்த பலவகை உணவுகளை மதிப்பிட்டுப் பரிசு கொடுத்தனர் ஹூஸ்டன் தந்தையர். இளைஞர்கள் தந்தையரைப் போற்றித் தாம் செய்த கலைப்பொருட்கள் மற்றும் டீஷர்ட்டுகளை வழங்கினர். "இடையே மழை பெய்தாலும் தந்தையரின் உற்சாகத்தால் அனைவரும் தொடர்ந்து இருந்தது பெருமகிழ்ச்சி தந்தது" என்கிறார் கிளைத்தலைவர் திருமதி மாலா கோபால். செயலர் டாக்டர் நளினி பாலசந்திரன் தாம் திருவாரூர் மாவட்ட அரசுப் பள்ளியில் படித்தவர் என்றும் ஹூஸ்டன் கிளை அந்த மாவட்டத்தைத் தத்தெடுத்துக் கொண்டு ABC கல்வித்திட்டம் மூலம் அரசுப்பள்ளிக் குழந்தைகளுக்கு உதவுகிறது என்றும் தெரிவித்தார். பொருளாளர் புனிதா தங்கராஜ் நன்றி தெரிவித்தார்.

அகிலன் கோபாலன்,
ஹூஸ்டன், டெக்சஸ்

© TamilOnline.com