TNF நடுவண் ஒஹையோ: டென்னிஸ் போட்டிகள்
2018 ஜூன் 23, 24 தேதிகளில் தமிழ்நாடு அறக்கட்டளை நடுவண் ஒஹையோ கிளை (TNF-Central Ohio Chapter) முதன்முறையாக டென்னிஸ் போட்டிகளை நடத்தியது. உயர்நிலைப்பள்ளி மாணவர்கள், ஆடவர், பெண்டிர் என நூற்றுக்கும் மேலானோர் டென்னிஸ் மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டிகளில் ஆர்வத்தோடு பங்கேற்றனர். அறம்சார்ந்த அமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்வு என்பதால் போட்டியில் கலந்துகொள்ளாதோரும் மனமுவந்து நன்கொடை வழங்கினர். இந்த நிகழ்வு தமிழ்நாடு அறக்கட்டளையின் அறப்பணிகளை முன்னெடுத்துச் செல்ல ஏதுவாக அமைந்தது.

மணி பெரியகருப்பன்,
டப்ளின், ஒஹையோ

© TamilOnline.com