ஜூலை 2018: வாசகர் கடிதம்
ஜூன் தென்றல் இதழில் திருமதி எஸ் .வேதவல்லி, நேர்காணலில் முக்கியமான பல விஷயங்களைச் சிறப்பாகச் சொல்லியிருக்கிறார். யோகா என்பது புற்றுநோய்க்கு மட்டுமல்ல, ஆரோக்கியமாக வாழ்வதற்கும் அனைவருக்கும் மிக அவசியமானது என்ற ஆச்சார்ய ஜெய்கோபால் அவர்களின் யோசனைப்படி அதை அனைவரிடமும் கொண்டுசேர்க்க வேண்டிய முயற்சிகளின் அவசியத்தைப் பற்றி அருமையாக எடுத்துரைத்துள்ளார். ‘மேலோர் வாழ்வில்’ பகுதியில் மதம்கடந்த மனிதநேயம் மிக்க மகான் ஸ்ரீ நாராயண குரு அவர்களின் 150வது பிறந்தநாள் குறித்த விபரங்கள் அறிந்து மகிழ்ந்தோம்.

திரு B.V. வைத்தீஸ்வரன் அவர்களின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறோம். சீதா துரைராஜ் அவர்களின் ஸ்ரீ கோனியம்மன் ஆலயம் கோயம்புத்தூர் பற்றிய கட்டுரையில் பல தெரியாத விபரங்கள் தெரிந்துகொண்டோம்.

சசிரேகா சம்பத்குமார்,
யூனியன் சிட்டி, கலிஃபோர்னியா

© TamilOnline.com