கண்மணி பாப்பா


தமன்குமார் நாயகனாகவும், மியாஸ்ரீ நாயகியாகவும் நடித்திருக்கும் படம் கண்மணி பாப்பா. கண்மணியாக பிரபல நகைச்சுவை நடிகர் கொட்டாச்சியின் மகள் மானஷ்வி நடித்திருக்கிறார். முக்கிய வேடங்களில் சிங்கம்புலி, சந்தோஷ் சரவணன், சிவம், நாகா, ஹேமா நடித்துள்ளனர். ஸ்ரீசாய் தேவ் வி இசையில், புதுமுக இயக்குநர் ஸ்ரீமணி கதை எழுதி இயக்குகிறார். அப்பா, அம்மாவின் அரவணைப்பில் மகிழ்ச்சியோடு வாழ்ந்து வரும் கண்மணிப் பாப்பா திடீரென காணாமல் போகிறார். ஏன் காணாமல் போனார், திரும்பக் கிடைத்தாரா இல்லையா என்பதை அமானுஷ்யம் கலந்த த்ரில்லராகச் சொல்கிறது இப்படம். பயங்காட்டுமா பாப்பா?

அரவிந்த்

© TamilOnline.com