வெல்வெட் நகரம்


நடிகை வரலட்சுமி நாயகியாக நடிக்கும் படம் வெல்வெட் நகரம். உடன் மாளவிகா சுந்தர், ரமேஷ் திலக், பிரகாஷ் ராகவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அச்சு ராஜாமணி இசையமைக்க, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் மனோஜ்குமார் நடராஜன். “கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படம் இது. சில ஆண்டுகளுக்கு முன் கொடைக்கானல் மற்றும் சென்னையில் நடந்த சில உண்மைச் சம்பவங்களை தழுவிய பரபரப்பான திரில்லர் இது. 48 மணி நேரத்தில் நடக்கும் ஒரு கதை. பத்திரிக்கையாளர் வரலட்சுமி, நடந்த ஒரு அநீதிக்கான ஆதாரத்தைத் தேடித் துப்பறிய மதுரையிலிருந்து சென்னைக்கு வருகிறார். அங்கே நடக்கும் சம்பவங்கள் மிகத் திகிலானவை” என்கிறார் இயக்குனர்.

அரவிந்த்

© TamilOnline.com