பேய் பசி


இது ஒரு புதிய படம். நாயகனாக ஹரி கிருஷ்ணன் பாஸ்கர் நடிக்க, உடன் விபின், அம்ரிதா, டேனியல் பாலாஜி, கருணாகரன் நடிக்கின்றனர். புதுமுக இயக்குநர் ஸ்ரீனிவாஸ் கவிநயம் படத்தை இயக்குகிறார். “இது ஒரு திரில்லர். இதற்குப் பாடல்கள் பொருந்தாது என்று கருதித் தவிர்த்துவிட்டோம். ஆனால் பின்னணி இசை மிக அவசியம் என்பதால் யுவன்ஷங்கர்ராஜாவை ஒப்பந்தம் செய்தோம். சூப்பரா செஞ்சிருக்காரு. ஆனால் அவருடைய ரசிகர்களுக்கு, பாடல்கள் இல்லை என்ற செய்தி ஏமாற்றமளித்து விட்டது. ஆகவே ஒரு புரமோஷன் பாடலைச் சேர்த்தோம். அதில் அவரே நடித்தும், நடனம் ஆடியும் தந்தது படத்துக்குப் பெரிய பலம்” என்கிறார் இயக்குநர். ஏனுங்க... ஒரு சந்தேகம், பேய்க்குப் பசிக்குமுங்களா?

அரவிந்த்

© TamilOnline.com