கணிதப் புதிர்கள்
1) நான்கு ஐந்துகளையும் கணிதக் குறியீடுகளையும் பயன்படுத்தி (கூட்டியோ, கழித்தோ, வகுத்தோ, பெருக்கியோ) விடை ஐந்து வரச் செய்யவேண்டும். இயலுமா?

2) ஒன்பதுடன் ஐந்தைக் கூட்டினால் வருவது இரண்டு என்கிறான் சேகர். அது ஒருவிதத்தில் சரிதான் என்கிறார் அவன் தாத்தா. எப்படி?

3) ராமு தன் வீட்டில் சில பறவைகளை வளர்த்து வந்தான். சோமு அவை என்ன என்று விசாரித்தான். அதற்கு ராமு, “என் வீட்டில் உள்ள பறவைகளில் இரண்டைத் தவிர மற்றது கிளி; இரண்டைத் தவிர மற்றது புறா; இரண்டைத் தவிர மற்றது மைனா. நீயே எது, எத்தனை என்று கண்டுபிடித்துக் கொள்” என்றான். சோமுவால் கண்டுபிடிக்க முடியவில்லை. உங்களால் முடிகிறதா?

4) 1 = 5
2 = 25
3 = 325
4 = 4325
5 = ?

5) நாற்பதிற்கு மேற்பட்ட வரிசையான நான்கு பகா எண்களின் கூட்டுத்தொகை 220 வருகிறது என்றால், அந்த எண்கள் யாவை?

அரவிந்த்

விடைகள்

© TamilOnline.com