வெந்தயத் தொக்கு
தேவையான பொருட்கள்
வெந்தயம் - 1/4 கிண்ணம்
மிளகாய்வற்றல் - 6
வெல்லம் (துருவியது) - 1 தேக்கரண்டி
புளி பேஸ்ட் - 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 1 குழிக்கரண்டி
கடுகு - 1 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 மேசைக்கரண்டி
பெருங்காயத்தூள் - 1/4 மேசைக்கரண்டி

செய்முறை
வெந்தயம், மிளகாய் வற்றல் இரண்டையும் ஒருமணி நேரம் ஊற வைக்கவும். மிக்சியில் போட்டு வழுவழுப்பாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், கறிவேப்பிலை, வெல்லம் சேர்க்கவும். புளி பேஸ்ட், ஒரு கிண்ணம் தண்ணீருடன் வெந்தய விழுதைச் சேர்த்துக் கிளறவும். தேவையான உப்புச் சேர்க்கவும். தளதளவென எண்ணெய் மேலே வரும்போது அடுப்பை அணைக்கவும்.
வெந்தயத்தின் கசப்பே இருக்காது. தோசை, இட்லி, சப்பாத்தி, பிரெட்டுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

கிருஷ்ணவேணி,
ஃபேர்ஃபாக்ஸ், வர்ஜீனியா

© TamilOnline.com