மே 5, 2018 அன்று கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள சாக்ரமென்டோ ஃபால்சொம் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்மன்றம் தமிழ்ப் புத்தாண்டு விழா கொண்டாடியது. இதில் தமிழ்ப் பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் கலைநிகழ்ச்சிளை வழங்கினார்கள். தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி துவங்கியது. பாரதியார் பாடல்களும் நடனங்களும் நாடகங்களும் நடத்தப்பட்டன. தமிழ்க் குடும்பங்கள் மட்டுமன்றிப் பிறமொழி பேசுவோரும் விழாவில் ஆர்வத்துடன் வந்து பங்கேற்றனர்.
தமிழ்ப் பள்ளி மாணவ மாணவியரை உற்சாகப்படுத்தும் வகையில் அவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இந்த வருடம் நடைபெற்ற திருக்குறள் போட்டிகளில் வென்றோருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
சந்தியா, சாக்ரமென்டோ, கலிஃபோர்னியா |