மே 20, 2018 அன்று ஹூஸ்டன் மீனாட்சி திருக்கோவிலில் திரு. வரதராஜன் 'கம்பர் கண்ட இராமன்' என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். முன்னதாக, பாரதி கலைமன்றத் தலைவர் திரு மணி வைத்தீஸ்வரன் வரவேற்றுப் பேசினார். திரு வரதராஜன் தாம் எழுதிய நூல் ஒன்றை மீனாட்சி கோவில் தலைவர் திருமதி பத்மினி ரங்கநாதனுக்கு வழங்கினார். முனை. நா. கணேசன் தமிழ்ப் புலவர்களின் சிறப்பைக் கூறினார். திரு சாம் கண்ணப்பன் தமது ஊரான நாட்டரசன் கோட்டையில் கம்பர் காலமானது பற்றிக் கூறினார்.
வரதராஜன் பேசுகையில் இராமாயணத்தில் மூன்று தருணங்களில் ராமபிரான் தலைமைப் பொறுப்பை நிறைவேற்றியது பற்றி விளக்கிப் பேசினார். அவருடைய உரை மிகச்சுவையாக அதே சமயம் நுட்பமாக அமைந்திருந்தது. காரைக்குடி அழகப்பா கல்லூரியில் படித்த இவர் தற்பொழுது சிங்கப்பூரில் வசித்துவருகிறார்.
மணி வரதராஜன், ஹூஸ்டன், டெக்சஸ் |