ஆருத்ரா


கவிஞர் பா. விஜய் எழுதி, இயக்கும் படம் ஆருத்ரா. நாயகனாக அவரே நடிக்க நாயகிகளாக மாடல்கள் தக்ஷிதா, சோனி, மேகாலீ உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இவர்களுடன் கே. பாக்யராஜ், ஒய்.ஜி. மகேந்திரன், விக்னேஷ், மயில்சாமி, பேராசிரியர் கு. ஞானசம்பந்தன், உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இசை: வித்யாசாகர். "ஆருத்ரா ஒரு எமோஷனல் க்ரைம் திரில்லர். இதில் இயக்குநர் பாக்யராஜும், மொட்டை ராஜேந்திரனும் துப்பறியும் நிபுணர்களாக நடித்திருக்கிறார்கள். என்னுடைய தந்தையாக வித்தியாசமான தோற்றத்தில் எஸ்.ஏ. சந்திரசேகர் நடித்திருக்கிறார். ‘ஆருத்ரா’விலும் சமூகக்கருத்து ஒன்றை அக்கறையுடன் மையப்படுத்தியிருக்கிறேன்." என்கிறார் பா. விஜய்.

அரவிந்த்

© TamilOnline.com