செயல்


ராஜன் தேஜேஸ்வர் நாயகனாக நடிக்கும் படம் செயல். நாயகியாகத் தருஷி அறிமுகமாகிறார். உடன் முனீஸ்காந்த், ரேணுகா, வினோதினி, தீனா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். வில்லனாக சமக் சந்திரா அறிமுகமாகிறார். சித்தார்த் விபின் இசையமைக்க, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ரவி அப்புலு. இவர் விஜய் நடித்த ‘ஷாஜகான்’ படத்தை இயக்கியவர். யானை பலம் கொண்ட ஒருவனை சாதாரண மனிதன் எதிர்த்து வெற்றிகொள்வதுதான் படத்தின் கதையாம். காதல் + நகைச்சுவை + ஆக்‌ஷன் கலந்த இப்படம், தங்கசாலை மார்கெட் பின்னணியில் உருவாகியிருக்கிறது.

அரவிந்த்

© TamilOnline.com