ஆசிரியர்
நடமாடிப் பேசுகிற
நல்ல புத்தகம்.

மாணவ மஞ்சரிக்கு
ஒளிதரும் சூரியன்.

உறுத்தாத உளிகொண்டு
மாணவனைச் செதுக்கும்
மந்திரச் சிற்பி.

பட்டால் பற்றிவிடும்
ஞானச்சுடர்.

வகுப்பறையில் பேசினார் - அங்கே
நாற்பது பேர் கற்றனர்.

புத்தகத்தில் பேசினார் - அதில்
புகுந்தோரெல்லாம் கற்றனர்.

இணையத்தில் பேசினார் - இனி
காலதேசம் கடந்து
காண்போரெலாம் கற்பார்!

ஆசிரியர்
நடமாடிப் பேசுகின்ற
நல்ல புத்தகம்!

உதயகுமார் J.R.,
அட்லாண்டா, ஜார்ஜியா

© TamilOnline.com