ஆன்மீகவாதியும் சிறந்த சமூக சேவையாளருமான பூஜ்யஸ்ரீ மதி ஒளி சரஸ்வதி அம்மையார் (77) இறைவனடி எய்தினார். இவர், அக்டோபர் 9, 1940ல், புதுவையில், ராமச்சந்திரன்-ஜயலட்சுமி தம்பதியினருக்கு மகவாகப் பிறந்தார். இளவயதிலேயே தமிழ்மீதும் ஆன்மிகம் மீதும் மிகுந்த பற்றுக் கொண்டிருந்தார். பின்னர் தமிழகத்திற்கு இடம்பெயர்ந்தார். தமது சமூகப்பணிகளைத் தொடர்ந்தார். குழந்தைகளுக்காகவும் பெரியவர்களுக்காகவும் 80க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கும் இவர், நந்தலாலா சேவா சமிதி என்ற அமைப்பைத் தோற்றுவித்து, அதன் மூலம் அமெரிக்கா உட்படப் பல இடங்களிலும் சமூகப்பணிகளைச் செய்து வந்தார். குழந்தைகள், பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மீது மிகுந்த அக்கறை கொண்டவர். அவர்கள் நலன் உயரக் கல்வி, மருத்துவ வசதிகள் உள்படப் பல்வேறு நற்பணிகளைச் செய்துவந்தார். அவரைப் பலரும் அம்பாளின் அவதாரமாகவே கருதி வழிபட்டனர். புதுச்சேரியில் இவர் அமைத்திருந்த நூலகம் சிறப்பானதாகும்.
|