பாலக் கட்லெட்
தேவையான பொருட்கள்
பாலக் கீரை - 200 கிராம்
பச்சைப் பட்டாணி - 50 கிராம்
கேரட் (பொடியாக நறுக்கியது) - 50 கிராம்
உருளைக்கிழங்கு (வேகவைத்து உரித்தது) - 4
ரொட்டித் தூள் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 4
இஞ்சி - சிறு துண்டு
சீரகம் - சிறிதளவு
உப்பு - ருசிக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை
பாலக் கீரையை வேகவைத்து உருளைக்கிழங்குடன் சேர்த்து மசிக்கவும். கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, சீரகம், மிளகாய், இஞ்சி, கேரட், பட்டாணி போட்டு வதக்கிக் கொள்ளவும். இதைப் பாலக் கீரை உருளை மசித்ததுடன் கலந்து, ருசிக்கேற்ப உப்புச் சேர்த்துப் பிசைந்து சிறுசிறு உருண்டைகளாக நீளவாக்கில் தட்டவும். ரொட்டித் தூளில் பிரட்டி, தோசைக்கல்லில் எண்ணெய் தடவி அதில் பொன் நிறமாகச் சுட்டு எடுக்கவும். பொரித்தும் எடுக்கலாம்.
தக்காளி சாஸுடன் சாப்பிட ருசியாக இருக்கும். கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

சேது ஷண்முகம்,
ஒட்டாவா, கனடா

© TamilOnline.com