கம்பு ஓட்ஸ் தோசை
தேவையான பொருட்கள்
ஓட்ஸ் - 1 கிண்ணம்
கம்பு மாவு - 1/2 கிண்ணம்
வெங்காயம் - சிறிதளவு
பச்சை மிளகாய் - 1
கொத்துமல்லித் தழை - சிறிதளவு
சீரகம் - 1 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி

செய்முறை
மேலே கூறியுள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்றாகத் தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்குக் கரைத்துக் கொள்ளவும். அதைத் தோசை கல்லில் சிறிய சிறிய தோசைகளாக ஊற்றி இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும். இதைக் காலைச் சிற்றுண்டி அல்லது மாலைச் சிற்றுண்டியாகத் தக்காளித் துவையலுடன் சாப்பிட ருசிக்கும்.

தெய்வானை சோமசுந்தரம்

© TamilOnline.com