ஏப்ரல் 21, 2018 அன்று, சென்னையருகே ஸ்ரீபெரும்புதூரில் இயங்கிவரும் விதை (SEED - Society for the Educational and Economic Development) அமைப்புக்கு நிதி திரட்டுமுகமாக ஓர் இசைநிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கருத்தாழமிக்க பன்மொழிப் பாடல்களைத் தேர்ந்தெடுத்து மயாங்க், கௌரவ், வனிதா, நாதன், ஹரீஷ், ஷைலஜா, அருண்குமார், ஆர்த்தி, விக்னேஷ், வெங்கட், அக்ஷயா, மினு, வர்ஷா, அனு (கீபோர்ட்), அருண் (வயலின்) மற்றும் ராபர்ட் (பாப் - கிதார்) ஆகியோர் திறம்பட வழங்கினர். நிகழ்ச்சியை அற்புதமாகத் தொகுத்து வழங்கியோர் விக்ரம், ப்ரீத்தி மற்றும் அக்ஷயா ஆகியோர். உதவியாக இருந்த ஊடகத்தினர் 8K ரேடியோ, போயோ டி.வி.
குற்றங்களின் காரணமாக தண்டனைபெற்ற பெற்றோரின், குழந்தைகள் சமூகத்தின் பார்வையில் அகதிகளாகி விடுகின்றனர். அல்லது, அவர்கள் தொழுநோயாளியராக இருந்தால் அவர்களது குழந்தைகளையும் விலக்கி வைக்கும் அவலம் இன்றைக்கும் உள்ளது. இங்ஙனம் துன்புறும் குழந்தைகளுக்கு இருப்பிடம், கல்வி, நல்லுணவு, முன்னேறிச் சீரடைய வாழ்வியல் வழிமுறை முதலியவற்றை அமைத்துத் தருகிறது 'விதை'.
விதை அமைப்பைத் தொடங்கி நடத்தி வருபவர் திரு. பழனிச்சாமி. அதன் செயல்பாட்டை நேரில் கண்ட வெங்கட் குடும்பத்தினர் பல வருடங்களாக உதவி வருகின்றனர். தங்களால் இயன்ற அளவிற்கு உதவி செய்யும் முயற்சியே சிகாகோ வானவில் இசைக்குழுவின் இந்த இசைநிகழ்ச்சி.
தொடர்புக்கு: சிகாகோ வானவில் இசைக்குழு
தொலைபேசி: மினு - 248.224.6694 வெங்கட் - 312.731.1797
நிரஞ்சனா, சிகாகோ, இல்லினாய்ஸ் |