தேவகோட்டை காதல்


சீனு என்ற புதுமுகம் நாயகனாக அறிமுகமாகும் படம் 'தேவகோட்டை காதல்'. நாயகியாக கவிதா அறிமுகமாகிறார். இவர்களுடன் கஞ்சா கருப்பு, பாவா லட்சுமணன் தீப்பெட்டி கணேசன், அனு உட்பட்டோர் நடிக்கின்றனர். இசை: ஜோனபக்தகுமார். எழுதி, இயக்குகிறார், ஏ.ஆர்.கே. இவர் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவிடம் உதவியாளராகப் பணியாற்றியவர். "படித்த, அழகான பணக்காரப் பெண்ணுக்கும் படிக்காத அழகில்லாத ஏழைப் பையனுக்கும் காதல் ஏற்படுகிறது. சிக்கலுக்குக் கேட்கவேண்டுமா! அதுதான் கதை" என்கிறது கோலிவுட் பட்சி.

அரவிந்த்

© TamilOnline.com