தேவதாஸ் பிரதர்ஸ்


திலகர் துருவா, பாலசரவணன், அஜய் பிரசாத், மெட்ராஸ் ஜானி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிகும் படம் தேவதாஸ் பிரதர்ஸ். நாயகி சஞ்சிதா ஷெட்டி. சற்குணம், வேல்ராஜ் போன்றோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ஜானகிராமன் இயக்குகிறார். "சென்னையில் அடையாறு, ஆழ்வார்பேட்டை, கே.கே. நகர், வியாசர்பாடி என நான்கு வெவ்வேறு பகுதிகளில் வசிக்கும் நான்கு இளைஞர்கள் ஒருவரையொருவர் அறியாமலேயே சம்பந்தப்படுகின்றனர். அவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் திருப்பங்கள்தான் படத்தின் உயிர்நாடி" என்கிறார் ஜானகிராமன். இசை: தரண்.

அரவிந்த்

© TamilOnline.com