ஜகஜால கில்லாடி


'துள்ளாத மனமும் துள்ளும்', 'பூவெல்லாம் உன் வாசம்' தொடங்கி 'வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்', 'சரவணன் இருக்க பயமேன்' போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய எழில், தற்போது இயக்கிவரும் படம் ஜகஜால கில்லாடி. நாயகனாக விஷ்ணு விஷால் நடிக்கிறார். நிவேதா பெத்துராஜ், கதாநாயகி. யோகி பாபு, நான் கடவுள் ராஜேந்திரன், ரவிமரியா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். காதல் + நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து படத்தை உருவாக்கி இருக்கிறாராம் எழில். இசை: இமான்.

அரவிந்த்

© TamilOnline.com