சுட்டுப்பிடிக்க உத்தரவு


இயக்குநர் மிஷ்கின், இயக்குநர் சுசீந்திரன் மற்றும் நடிகர் விக்ராந்த் முக்கிய வேடத்தில் தோன்றும் படம் 'சுட்டுப்பிடிக்க உத்தரவு.' 'தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்' படத்தை இயக்கிய ராம் பிரகாஷ் ராயப்பா இப்படத்தின் கதை எழுதி இயக்குகிறார். "விக்ராந்த், சுசீந்திரன் இருவரும் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் வேலை செய்பவர்கள். ஒருநாள் அவர்கள் பணியில் இருக்கும்பொழுது 'க்ரைம்' ஒன்று நடக்கின்றது. இதனை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக மிஷ்கின் வருகிறார். பார்வையாளர்களைச் சீட்டின் நுனியில் உட்கார்ந்து பார்க்கவைக்கும் கதை இது" என்கிறார் இயக்குநர். சுட்டாவது பிடிங்கய்யா!

அரவிந்த்

© TamilOnline.com