தெரியுமா?: ஆஸ்டின் தமிழ்ப்பள்ளிக்கு அங்கீகாரம்
ஆஸ்டின் தமிழர்களின் நீண்டநாள் கனவாக இருந்த ஆஸ்டின் தமிழ்ப்பள்ளிக்கான அங்கீகாரம் கிடைத்துவிட்டது. இந்த அங்கீகாரத்தைப் பெற்ற அமெரிக்காவின் ஒருசில தமிழ்ப்பள்ளிகளில் ஆஸ்டின் தமிழ்ப்பள்ளியும் ஒன்று என்பது குறிப்பிடத் தக்கது. இதற்கான சான்றிதழ் ஏப்ரல் 1, 2018 அன்று தமிழ்ப்பள்ளி சுற்றுலாவின்போது Dr. சின்னநடேசன் அவர்களால் வெளியிடப்பட்டது.

2012ல் 20 மாணவர்கள், 6 தன்னார்வ ஆசிரியர்களுடன் அமெரிக்கத் தமிழ்க்கல்விக் கழகத்தின் பாடத்திட்டத்துடன் துவங்கப்பெற்ற இந்தப் பள்ளி இன்று 170க்கும் மேற்பட்ட மாணவர்கள், 50 தன்னார்வலர்களுடன் ஆல்போல் வளர்ந்துள்ளது. டெக்சஸ் ஸ்டேட் பல்கலைப் பேராசிரியர் நந்தினி ரங்கராஜன் தமிழாக்க முயற்சிகளில் பேருதவி புரிந்தார்.

மேலும்விவரங்களுக்கு: www.austintamilschool.com

அன்பு அன்பரசு,
ஆஸ்டின், டெக்சஸ்

© TamilOnline.com