தெரியுமா?: சிலிக்கான் வேலியில் GTEN 18
மே 3, 2018 அன்று சான்டா கிளாராவில் The Global Tamil Entrepreneurs Network (GTEN) மாநாடு நடைபெறவுள்ளது. இதை அமெரிக்கத் தமிழ் தொழில்முனைவோர் சங்கம் (ATEA) நடத்துகிறது. அடுத்து 4 மற்றும் 5ம் தேதிகளில் TiEcon (now TiEInflect) நடபெற உள்ளது. உலகெங்கிலுமிருக்கும் தமிழ் தொழில்முனைவோர், முதலீட்டாளர், தொழில்துறை ஊக்கிகள், சிந்தனை முன்னோடிகள் மற்றும் புத்தாக்கம் செய்வோரை GTEN2018 ஒருங்கே கொண்டுவரும் இந்த மாநாடு. இதில் தமிழர் மட்டுமன்றி எல்லாத் தொழில்முனைவோரும் பங்கேற்கலாம். சுமார் 500 பிரதிநிதிகள் இதில் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இந்தியா, அமெரிக்கா மற்றும் உலகெங்கிலுமுள்ள இந்தியத் தொழில் முனைவோர், இளைஞர்கள், மகளிர், வளரும் தொழில்முனைவோர் ஆகியோரை நல்ல தொழில்முறைக் கூட்டுறவை ஏற்படுத்துவதில் ATEA கவனம் செலுத்துகிறது.

அதிகத் தகவலுக்கு: www.ateausa.org
ஆதரவு கொடுக்க: info@ateausa.org

நர்சி கஸ்தூரி,
கூப்பர்டினோ

© TamilOnline.com