கணிதப் புதிர்கள்
1) 1, 27, 625 ... வரிசையில் அடுத்து வர வேண்டிய எண் எது, ஏன்?

2) ஒரு பெட்டியில் 50 சாக்லேட்கள் இருந்தன. அவற்றை ராமு, சோமு, பாலா, லீலா ஆகிய நால்வரும் பங்கிட்டுக் கொண்டனர். லீலாவிடம் இருந்த சாக்லேட்களை விட ராமு மூன்று சாக்லேட் அதிகம் வைத்திருந்தான். பாலாவிடம் இருந்த சாக்லேட்களை விட மூன்று சாக்லேட் அதிகமாக சோமு வைத்திருந்தான். சோமுவிடம் இருந்ததைவிட லீலா மூன்று சாக்லேட் அதிகம் வைத்திருந்தாள். அப்படியென்றால் ஒவ்வொருவரிடமும் இருந்த சாக்லேட்களின் எண்ணிக்கை என்ன?

3) ஒரு திருமணத்திற்காக வந்திருந்த விருந்தினர்களில் இருவரில் ஒருவர் ஆப்பிள் பானத்தைப் பருகினர். மூவரில் ஒருவர் திராட்சை ரசத்தைப் பருகினர். நால்வரில் ஒருவர் மாம்பழ பானம் பருகினர். மொத்தம் 130 பானங்கள் அந்த விருந்தில் பரிமாறப்பட்டன என்றால் வந்திருந்த விருந்தினர்களின் எண்ணிக்கை என்ன?

4) இரண்டு எண்களின் கூட்டுத்தொகை = 111; அவற்றிற்கிடையே உள்ள வித்தியாசம் 25. அந்த எண்கள் எவை?

5) ஒரு பள்ளியில் சில குழந்தைகள் இருந்தனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் 5 சாக்லேட் வீதம் கொடுத்தால் 7 சாக்லேட் மிஞ்சியது. ஆறு வீதம் கொடுக்க முற்பட்டதில் 5 சாக்லேட் பற்றாக்குறை ஆனது. அப்படியென்றால் சாக்லேட்டுகள் எத்தனை, குழந்தைகள் எத்தனை?

அரவிந்த்

விடைகள்

© TamilOnline.com