தேவையான பொருட்கள்
வெண்டைக்காய் - 20 வெங்காயம் பொடியாக நறுக்கியது - 1 கிண்ணம் தக்காளி பொடியாக நறுக்கியது - 1 கிண்ணம் பதப்படுத்திய சோளம் (frozen corn) - 1/2 கிண்ணம் தோல் உரித்த பூண்டு பொடியாக நறுக்கியது - 1/2 தேக்கரண்டி இஞ்சி பொடியாக நறுக்கியது - 1/2 தேக்கரண்டி மஞ்சள் பொடி - 1/4 தேக்கரண்டி மிளகாய் பொடி - 1 தேக்கரண்டி கரம் மசாலாபொடி - 1/2 தேக்கரண்டி நறுக்கிய பச்சை கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு
செய்முறை
வெண்டைக்காய்களை நன்றாக கழுவி பின்னர் அதன் நுனியையும் அடியையும் சிறிதளவு வெட்டி எறிந்து விட்டு பின்னர் அவற்றை ஒரு அங்குல அளவு துண்டங் களாக நறுக்கி வைக்கவும்.
ஒரு அடி கனமான வாணலியில் சிற்து அளவு எண்ணெய்விட்டு மிதமான தீயில் வைத்து வெண்டைக்காய் துண்டங்ககளை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு எண்ணெயில் பொரித்து ஒரு வடிகட்டியில் எடுத்து வைக்கவும்.
இதே எண்ணெயில் நறுக்கிய இஞ்சி பூண்டு துண்டங்ககளை போட்டு வதக்கி பின்னர் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.
நறுக்கிய தக்காளியை, பதப்படுத்திய சோளம், போட்டு நன்றாக வத்க்கவும். கரம் மசாலா பொடி, உப்பு, மஞ்சள் பொடி, மிளகாய் பொடியை இத்துடன் சேர்த்து நன்றாக சிறிது நேரம் கொதிக்கவிடவும். மிக கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ளவும். அதிகமாக தண்ணீர் கண்டிப்பாக விடக்கூடாது. இவை எல்லாம் நன்றாக சேர்ந்து கொதித்ததும் பொரித்து வைத்துள்ள வெண்டைக்காய் துண்டங் களை போட்டு லேசாக கிளறி ஒரு மூடியால் மூடி ஐந்து நிமிடங்கள் கொதித்தபின் அடுப்பில் இருந்து இறக்கி நறுக்கிய பச்சைகொத்தமல்லி இலைகளை தூவவும்.
இது சப்பாத்தி, சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். பதப்படுத்திய சோளம் இல்லாமலும் செய்யலாம். வேண்டு மானால் பதப்படுத்திய பட்டாணியும் சேர்த்து செய்யலாம்.
சரஸ்வதி தியாகராஜன் |