வெண்டைக்காய் மோர்க்குழம்பு
தேவையான பொருட்கள்

வெண்டைக்காய் -
கெட்டியான புளிக்காத தயிர் - 2 கிண்ணம்
பாதாம் பருப்பு - 5 அல்லது
தேங்காய் துறுவல்
தனியா - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
கடலை பருப்பு - 1 1/2 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 4
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் பொடி - ஒரு சிட்டிகை
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
கடுகு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - கொஞ்சம்
சமையல் எண்ணெய் - தாளிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை

தனியா, சீரகம், கடலைப்பருப்பை 20 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைக்கவும்.

வெண்டைக்காய்களை நன்றாக கழுவி பின்னர் அதன் நுனியையும் அடியையும் சிற்தி அளவு வெட்டி எறிந்து விட்டு பின்னர் அவற்றை ஒரு அங்குல துண்டங்களாக நறுக்கி வைக்கவும்.

மைக்ரோவேவில் வைக்ககூடிய ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் வெண்டைக் காய்களை போடவும். பின்னர் கொஞ்சம் உப்பு, மஞ்சள் பொடி சிறிது சேர்த்து நன்றாக கலக்கவும். வெண்டைக்காய் மூழ்கும் வரை தண்ணீர் விட்டு மைக்ரோ வேவில் உபயோகிக்கக் கூடிய ஒரு மூடியால் இதை சற்று இடைவெளிவிட்டு மூடி அதிக் திறனில் (high Power) இதை நன்கு வேகவிடவும். வெண்டைக்காய் உடைந்து விடாமல் பார்த்துக் கொள்ளவும்.

மிகவும் காய்ந்து நீர் வற்றி இருந்தால் சற்று தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.

வெண்டைக்காய் வெந்து கொண்டிருக்கும் போது, மோர்க்குழம்புக்கு தேவையான விழுதை தயாரிக்க்கலாம். ஊற வைத்துள்ள தில் இருந்து தண்ணீரை வடித்து விட்டு மிக்ஸியில் இவற்றை இஞ்சி, பச்சைமிளகாய் தேங்காயுடன்
சேர்த்து பட்டு போல அரைக்கவும்.

இந்த விழுதை தயிரில் சேர்த்து நன்றாக கலக்கி தேவையான உப்பு சேர்த்து ஒரு அடி கனமான பாத்திரத்தில் போட்டு அடுப்பில் மிதமான தீயில் வைத்து, வெந்த வெண் டைக்காய் துண்டங்களை அதனுடன் உள்ள தண்ணீருடன் சேர்த்து, குழம்பு நுரைத்து மேலெழும்பி வரும் போது அடுப்பிலிருந்து இறக்கி கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து கொட்டவும்.

பின்குறிப்பு: தேங்காய துறுவலுக்கு பதில் பச்சையாக தோலுடன் 5 பாதாம் பருப்புகளை (ஊற வைக்க வேண்டிய அவசியமில்லை) வைத்து அரைத்து செய்தால் மோர்க்குழம்பு அதிக ருசியுடன் இருக்கும்.

வெண்டைக்காய் உபயோகித்து அரைத்து விட்ட குழம்பும் செய்யலாம்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com