தினைமாவு பக்கோடா
தேவையான பொருட்கள் தினைமாவு - 1 கிண்ணம் கடலைமாவு - 1/2 கிண்ணம் அரிசிமாவு - 1/2 கிண்ணம் வெங்காயம் - 1 கிண்ணம் பச்சைமிளகாய் - 4 அல்லது 5 நெய் - 2 தேக்கரண்டி கறிவேப்பிலை - கொஞ்சம் உப்பு - தேவைக்கேற்ப எண்ணெய் - பொரிப்பதற்கு
செய்முறை மூன்று மாவுகளையும் கலந்து உப்பு, வெங்காயம், பச்சைமிளகாய். கறிவேப்பிலை, நெய் சேர்த்து, துளி தண்ணீர் ஊற்றிக் கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். எண்ணெயில் சிறிது சிறிதாய்க் கிள்ளிப் போட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். இது மிகவும் சுவையான பக்கோடா.
தங்கம் ராமசாமி, பிரிட்ஜ்வாட்டர், நியூஜெர்ஸி |