மங்களம் சீனிவாசன்
வண்ணக் கோலங்கள், தஞ்சாவூர் ஓவியங்கள், ரங்கோலியில் இறை வடிவங்கள் என அசர வைக்கிறார் திருமதி மங்களம் சீனிவாசன். பாபா, ரமணர், புன்னைநல்லூர் மாரியம்மன், காஞ்சி காமாட்சி, கிருஷ்ணர்-யசோதா,

லக்ஷ்மி நரசிம்மர், ஆலிலையில் கிருஷ்ணர் எல்லாமே தத்ரூபம். மகா சிவராத்திரி நாளன்று இவர் வரைந்த ரிஷபாரூடர் ஓவியம் சொக்க வைக்கிறது. மார்கழி மாதத்துக்கெனச் சிறப்பாக இவர் வரைந்த ஆண்டாள் ரூபம் அப்படியே

கண்முன் நிற்கிறார். ராதா-கிருஷ்ணர், மகாவிஷ்ணு, வெங்கடேசப் பெருமாள், மகாலக்ஷ்மி, சூரியன், மயில் எதுவானாலும் இவரது விரல்களிலிருந்து விழும் வண்ணங்களில் பிடிபட்டுவிடுகின்றன.

இவரது அற்புதத் திறமை அவருக்குத் தானாகவே கைவந்தது என்பதும் ஓர் ஆச்சரியம். மங்களம் திருச்சியருகே ஸ்ரீரங்கத்தில் வசிக்கிறார். இணையவெளியில் பரவலாகப் பாராட்டுக்களைப் பெற்றவை இவரது ஓவியங்கள். மலேசியா,

சிங்கப்பூர், துபாய், அமெரிக்கா என்று உலகெங்கிலும் இவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். இவரது ஓவியங்கள் விற்பனைக்கும் கிடைக்கின்றன.இவரது ஓவியங்களையும் கோலங்களையும், ராதா கண்ணன் கீழ்கண்ட முகவரியில் வலையேற்றியிருக்கிறார்.
www.facebook.com/Mangalam.Art.galleryஸ்ரீவித்யா ரமணன்

© TamilOnline.com