தேவையான பொருட்கள்
பதப்படுத்திய (frozen) வெண்டைக்காய் - 1 Packet கடுகு - 1 1/2 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி பச்சை மிளகாய் - 2 சமையல் எண்ணெய் - 2 மேசைக்கரண்டி உப்பு - தேவையான அளவு பச்சை மிளகாய் - 2
செய்முறை
இதை செய்வதற்கு 10 நிமிடங்கள் முன்னர் வெண்டைக்காய் Packetஐ திறந்து வைக்கவும்.
மைக்ரோவேவில் வைக்ககூடிய ஒரு கண்ணாடி பாத்திரத்தில் வெண்டைக் காய்களை போடவும். 1 மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு மஞ்சள்பொடியும் போட்டு கலந்து விடவும். இதை மைக்ரோவேவில் உபயோகிக்கக் கூடிய
ஒரு மூடியால் சற்று இடைவெளிவிட்டு மூடி அதிக திறனில் (high Power) 4 நிமிடங்கள் வைக்கவும். 2 நிமிடங்களுக்கு ஒரு முறை திறந்து ஒரு மரக்கரண்டியால் லேசாக கிளறிவிடவும். பின்னர் மூடியை எடுத்து விட்டு
மேலும் 3 நிமிடங்கள் வைக்கவும். பின்னர் ஒரு நாந்-ஸ்டிக் (non-stick) பானில் 1 மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து இதில் வெண்டைக்காய்களை போட்டு உப்பு, மிளகாய் பொடி சேர்த்து
கலந்து சிறிய தீயில் வைக்கவும். மூடக்கூடாது. அவ்வப்போது லேசாக கிளறி விடவும். இந்த கறி வெண்டைக்காய் துண்டங்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளமல் நல்ல மொர மொரப்பாக (crispy) வரும்.
சரஸ்வதி தியாகராஜன் |