மெட்ரோப்ளெக்ஸ்: சித்திரைத் திருவிழா
ஏப்ரல் 14, 2018 அன்று காலை 11 மணிமுதல் Marthoma Event Center (11550 Luna Road, Dallas TX 75234) மையத்தில் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கம் சித்திரைத் திருவிழாவைக் கோலாகலமாகக் கொண்டாட ஏற்பாடு செய்துள்ளது.

அரங்கில் குழந்தைகளுக்குக் குதிப்பான்கள், அங்காடித்தெரு கடைகள், பாரம்பரிய உணவுகள், தமிழ்ப் பள்ளிக் குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள், கேட்டு ரசிக்கத் துள்ளலிசைப் பாடல்கள் எல்லாம் உண்டு.

முதலில் வரும் ஆயிரம் பேருக்கு இலவச மருதாணி, குழந்தைகளுக்கு அழகிய முக ஓவியங்கள் போன்றவையும் உண்டு.

நீங்களும் கைவினைப் பொருள் முதல் சிறு/பெரு தொழில் வரை கடை விரிக்கலாம். உங்கள் தொழில்முனையும் ஆர்வத்தைக் காண்பிக்க மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்கம் வாய்ப்பொன்றை இங்கே வழங்குகிறது.

ஆர். தினகர்,
டாலஸ், டெக்சஸ்

© TamilOnline.com