அட்லாண்டா: தமிழ் மறைகளுடன் தமிழ்ப் புத்தாண்டு
ஏப்ரல் 14, 2018 அன்று மதியம் 2 மணிமுதல் அட்லாண்டா அன்பர்கள் தமிழ் மறைகளை ஓதித் தமிழ்ப் புத்தாண்டை வரவேற்க உள்ளனர். நிகழ்ச்சியில் தேவாரம், திருவாசகம், திவ்யப்பிரபந்தம், கந்தரனுபூதி போன்ற தமிழ்த் திருமறைகளில் இருந்து தெரிந்தெடுக்கப்பட்ட 40 பாசுரங்கள் ஓதப்படும்.

நாள்: சனிக்கிழமை, ஏப்ரல் 14, 2018
நேரம்: மதியம் 2 முதல் மாலை 7 மணிவரை
இடம்: Art of Living Center, 7730 Roswell Road, Atlanta, GA 30350


பங்கேற்பை உறுதி செய்ய மின்னஞ்சல் அனுப்புக: tamil.atlanta@gmail.com
பங்கேற்போருக்குச் சிற்றுண்டி மற்றும் இரவுணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அபய் ராதாகிருஷ்ணன்,
அட்லாண்டா, ஜார்ஜியா

© TamilOnline.com