தேவையான பொருட்கள்
வெண்டைக்காய் - 15 (1அங்குல துண்டங்களாக நறுக்கி வைக்கவும்). பொல பொல என்று இருக்கும் பசுமதி சாதம் - 2 கிண்ணம் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு தக்காளி பெரிதாக நறுக்கியது - 1/2 கிண்ணம். தோல் உரித்த பூண்டு பொடியாக நறுக்கியது - 1/2 தேக்கரண்டி இஞ்சி பொடியாக நறுக்கியது - 1/2 தேக்கரண்டி மஞ்சள் பொடி - 1/4 தேக்கரண்டி மிளகாய் பொடி - 1 தேக்கரண்டி அல்லது பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது - 1/2 தேக்கரண்டி கரம் மசாலாபொடி - 1/2 தேக்கரண்டி சீரக பொடி - 1/2 தேக்கரண்டி நறுக்கிய பச்சை கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு
செய்முறை
ஒரு ஒட்டாத வாணலியில் (நான்-ஸ்டிக் பான்) எண்ணெய் விட்டு அடுப்பில் மிதமான தீயில் வைத்து இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் போட்டு சற்று வதக்கி வெங்காயம், தக்காளியையும் சேர்த்து வதக்கி பின்னர்
வெண்டைக்காயை போட்டு சற்று வதங்கியபின்னர் உப்பு மற்றும் எல்லா பொடிகளையும் சேர்த்து கலந்து சிறிது ஈரப்பசை கூட இல்லாமல் முழுவதும் வதங்கிய பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி கொத்தமல்லி இலைகளால்
அலங்கரிக்கவும். இதை சாதத்துடன் கலந்து சாப்பிடவும்.
விருப்பமானால் சிறிது வறுத்த வேர்க் கடலைப் பொடியை கடைசியில் கலந்த சாதத்தில் மேல் தூவி சாப்பிட சுவை கூடும்.
சரஸ்வதி தியாகராஜன் |