கலசல்


நடிகை அம்பிகாவின் மகன் ராம் கேசவ் நாயகனாக அறிமுகமாகும் படம் கலசல். நாயகியாக நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் ஜோவிதா நடிக்கிறார். ராதாரவி முக்கிய வேடத்தில் தோன்றுகின்றார். மதன்பாப் உள்ளிட்ட முன்னணி நடிக, நடிகையர் முக்கிய வேடமேற்றுள்ளனர். சுந்தர் சி.யிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த அஷ்வின் மாதவன் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். படத்தில் அம்பிகாவும் நடிக்கிறார் என்று காதைக் கடிக்கிறார் கோலிவுட் கோவிந்து. அதுசரி, கலசல்னா?

அரவிந்த்

© TamilOnline.com