எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்


மேற்கண்ட தலைப்பில் உருவாகி வருகிறது ஒரு திரைப்படம். சத்யராஜ், கிஷோர், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மணிரத்னம் மற்றும் ஏ.ஆர். முருகதாஸிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சர்ஜுன். கே.எம். இப்படத்தை இயக்குகிறார். வாழ்க்கையை அனுபவிக்க நிறையப் பணம் வேண்டும் என்று இருவர், ஒரு பெண்ணைக் கடத்திப் பணம் பறிக்க நினைக்கின்றனர். அப்படிக் கடத்தப்பட்ட வரலட்சுமியை சத்யராஜ் எப்படிக் காப்பாற்றுகிறார் என்பதுதான் படம். படத்தின் கதாநாயகன், வில்லன் இரண்டுமே சத்யராஜ்தான் என்கிறது கோலிவுட் பட்சி. அதிரடி ஆக்‌ஷன் த்ரில்லர் இது. இசை: சுந்தரமூர்த்தி.

அரவிந்த்

© TamilOnline.com