கணிதப் புதிர்கள்
1) ராமு செல்லநாய் ஒன்றை வளர்த்து வந்தான். அதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது அதன் நிறத்தைப் பற்றிச் சொன்னான். சோமு உடனே "நாயின் நிறம் வெள்ளை, சரியா?" என்றான். கோபு, "இல்லை. நாயின் நிறம் வெள்ளை அல்ல" என்றான். உடனே பாபு, "ஏன், நாயின் நிறம் வெள்ளையாகவும் இருக்கலாம், சிவப்பாகவும் இருக்கலாம்" என்றான்.

உடனே ராமு, "நீங்கள் மூவர் சொன்னதில் ஒருவர் சொன்னது தவறு. இருவர் சொன்னது சரி" என்றான்.

நாயின் நிறம் என்னவாக இருக்கும் என்று உங்களால் ஊகிக்க முடிகிறதா?

2) நான்கு முறை எண் ஏழினைப் பயன்படுத்தி கூட்டியோ, கழித்தோ, வகுத்தோ, பெருக்கியோ விடையாக 78 வரவழைக்க வேண்டும். முடியுமா?

3) A, B, C என்னும் மூவரும் வியாபாரிகள். A, B இருவரும் இணைந்து சந்தைக்குச் சென்றால் அன்று 1000$ விற்பனை ஆகிறது. B, C இருவரும் சேர்ந்து சந்தைக்குச் சென்றால் அன்று 1500$ விற்பனை ஆகிறது. A, C இருவரும் சேர்ந்து சந்தைக்குச் சென்றால் அன்று 1200$ விற்பனை ஆகிறது. அப்படியானால் தனித்தனியாக ஒவ்வொருவரின் விற்பனைத் தொகை எவ்வளவு?

4) 1, 6, 13, 22 ...., .... வரிசையில் விடுபட்ட இடத்தில் வர வேண்டிய எண்கள் எது, ஏன்?

5) போட்டியில் வென்ற மாணவர்களுக்காக ஒரு பெட்டியில் 2401$ பரிசுப் பணம் இருந்தது. அது எத்தனை மாணவர்கள் இருக்கிறார்களோ அத்தனை பேருக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்பட்டது. அப்படியென்றால் மாணவர்கள் எத்தனை, அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பரிசுப் பணம் எவ்வளவு?

அரவிந்த்

விடைகள்

© TamilOnline.com