தேவையான பொருட்கள்
வெண்டைக்காய் - 20 கடுகு - 1 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி மஞ்சள் பொடி - 1/4 தேக்கரண்டி மிளகாய் பொடி - 1 தேக்கரண்டி பெருங்காய பொடி - 1 சிட்டிகை அளவு எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு
செய்முறை
வெண்டைக்காய்களை நன்றாக கழுவி பின்னர் காகிதத்தால் அல்லது துணியால் நன்றாக துடைத்துவிட்டு அதன் நுனியையும் அடியையும் சிறிதளவு வெட்டி எறிந்து விட்டு பின்னர் கால் அங்குல அளவு துண்டங் களாக நறுக்கி
வைக்கவும்.
ஒரு அடி கனமான வாணலியில் தேவை யான அளவு எண்ணெய் விட்டு மிதமான தியில் வைத்து கடுகு போட்டு வெடித்த பின்னர் உளுத்தம் பருப்பு போட்டு பொன்னிறமான பின்னர் வெண்டைக்காய் துண்டங்ககளை
போடவும். மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, பெருங்காய பொடியையும் போடவும்.
பின்னர் லேசாக கிளறி ஒரு தட்டால் சிறிது இடை வெளிவிட்டு மூடவும். இரண்டு நிமிடங்களுக்கு ஒரு முறை திறந்து அடி மேலாக கிளறி மறுபடி முன்போல் மூடி விடவும். கடைசியில் தேவையான அளவு உப்பு போட்டு
சற்று நேரம் மூடியைத்திறந்து வைத்து வதங்கியபின்னர் அடுப்பிலிருந்து இறக்கவும். இந்த கறியைக்கூட சாதத்துடன் கலந்து சாப்பிடலாம்.
சரஸ்வதி தியாகராஜன் |