தேவையான பொருட்கள் ரவை - 1 கிண்ணம் பச்சை மிளகாய் - 3 அல்லது 4 வெங்காயம் (பொடியாய் நறுக்கியது) 1/2 கிண்ணம் இஞ்சி (துண்டாய் நறுக்கியது) - சிறிதளவு முந்திரிப்பருப்பு (சிறியதாய் உடைத்தது) - சிறிதளவு தேங்காய்த் துருவல் - 2 தேயிலைக்கரண்டி தயிர் - 1 கிண்ணம் கொத்துமல்லி (பொடியாய் நறுக்கியது) - சிறிதளவு கறிவேப்பிலை (பொடியாய் நறுக்கியது) - சிறிதளவு உப்பு - சிறிதளவு எண்ணெய் - பொரிக்க
செய்முறை பச்சை மிளகாய், இஞ்சி, தேங்காய், வெங்காயம், முந்திரி, தயிருடன் கலந்து கொத்துமல்லி, கறிவேப்பிலையும் சேர்த்து ரவையை அதில் போட்டுக் கலக்கவும். உப்பு சேர்த்துக் கெட்டியாகப் பிசைந்து இரண்டு மணி நேரம் ஊறவிடவும். பிறகு எண்ணெயைக் காயவிட்டு, சிறு சிறு வடைகளாகத் தட்டி, எண்ணெயில் போட்டுப் பொரித்து பொன்னிறமாக எடுத்து வைக்கவும். இது சுவையான வடையாகும். தேங்காயை பல்லு பல்லாக நறுக்கிப் போட்டும் செய்யலாம். தேங்காய்ச் சட்னியுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
தங்கம் ராமசாமி, ப்ரிட்ஜ் வாட்டர், நியூ ஜெர்சி |