ஜனவரி 13 அன்று சான்டியாகோ தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா கொண்டாடியது. 500க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்று மகிழ்ந்தனர். கிராமச் சூழலையும், பொங்கல் காட்சிகளையும் சித்திரிக்கும் விதமாகக் காட்சிப் பொருள்கள் வைக்கப்பட்டன.
தவிர, வாழை இலையில் அறுசுவை விருந்து மதியம் பரிமாறப்பட்டது.
நான்குமணி நேரம் நாற்பதுக்கும் மேற்பட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆடல், பாடல், நகைச்சுவை, நாடகம் உள்ளிட்ட வித்தியாசமான நிகழ்ச்சிகள் வந்திருந்தோரை மகிழ்வித்தது.
சங்கம் நடத்திடும் பாரதியார் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்குக் கையேடுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் நடத்திய பாங்கும், வெளிப்படையான பங்கேற்பும் பார்த்தோருக்குப் பரவசமூட்டின.
சிவகுமார் குமாரசாமி, சான் டியகோ |