தேவையான பொருட்கள்
வெண்டைக்காய் - 10 தயிர் (Yogurt) - 1 1/2 கிண்ணம் கடுகு - 1 1/2 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி பச்சை மிளகாய் - 2 சமையல் எண்ணெய் - 3 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு
செய்முறை
தயிரில் தேவையான அளவு உப்பு போட்டு கலக்கி வைக்கவும். வெண்டைக்காய்களை நன்றாக கழுவி பின்னர் அதன் நுனியையும் அடியையும் சிறிதளவு வெட்டி எறிந்து விட்டு பின்னர் அவற்றை சிறிய துண்டங்களாக ஒரே அளவில் நறுக்கி ஒரு அடி கனமான வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு மிதமான தீயில் வைத்து வெண்டைக்காய்த் துண்டங்களை போட்டு நல்ல பொன்னிறமாக பொரித்து எடுத்து சூட்டுடன் தயிரில் போட்டு கலக்கவும்.
கடுகு, உளுத்தம்பருப்பு, பச்சைமிளகாயை ஒரு தேக்கரண்டி எண்ணெயில் தாளித்து கொட்டவும். இது ஊறாமல் மொர மொர என்று சாப்பிட விருப்பமானால் சாப்பிடுவதற்கு சிறிது நேரம் முன்னர் தயிரில் போட்டு கலக்கவும். வேண்டுமானால் தயிரில் சிறிது தேங்காய் அரைத்து கலக்கி இதில் பொரித்த வெண்டைக்காய் துண்டங்ககளை போட்டும் பச்சடி செய்யலாம்.
சரஸ்வதி தியாகராஜன் |