பொங்கல் கொண்டாட்டங்கள்: டாலஸ்: DFW நண்பர்கள் குழு
ஜனவரி 13, 2018 அன்று டெக்சஸ் மாகாணத்தின் டாலஸ் நகரிலுள்ள DFW தமிழ் நண்பர்கள் குழு DFW ஹிந்துக் கோவிலுடன் இணைந்து பொங்கல் விழா கொண்டாடினர்.

தமிழ்ப் பாரம்பரிய முறைப்படி மண்பானை, கரும்பு, மாடு, ஏர் கலப்பை, வாழை இலை, பதினாறு வகை அறுசுவை விருந்து எனச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் பொங்கல் விழாவை மையமாகக் கொண்டு சிறுவர் சிறுமியர் ஓவியம் வரைந்து வண்ணம் தீட்டினர். சிறுவர் சிறுமியர் மற்றும் பெரியவர்கள் நாட்டுப்புறப் பாடல்களுக்கு நடனம் ஆடியும், பாட்டுப் பாடியும் மகிழ்வித்தனர்.

மாலையில் வண்ணக் கோலமிட்டு, அனைவரும் ஒன்றுசேர்ந்து மாட்டுக்கு மாலை அணிவித்து பொங்கல் ஊட்டி மாட்டுப்பொங்கல் கொண்டாடினர். பின்னர் சிறுவர் சிறுமியருக்கான கயிறிழுக்கும் போட்டி, சாக்குப் போட்டி ஆகியவை நடைபெற்றன. பெரியவர்களுக்கும் கயிறிழுக்கும் போட்டியும், உரியடித்தல் போட்டிகள் நடைபெற்றன.

நிறைவாக உள்ளூர் இசைக்குழுவின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. நன்றியுரையுடன் இனிதே நிறைவுபெற்றது.

சசிகலா பாலசுப்ரமணியம்,
Frisco, TX

© TamilOnline.com